மதுரா நாயகா.. (40)
அசுரர்களை யெல்லாம் ஒரே அடியில் மரணிக்க வைத்து, அவர்களுக்கு ஸாயுஜ்யம், சாரூப்யம் போன்ற முக்தியைக் கொடுக்கும் கண்ணன், முசுகுந்தரைப் பார்த்து, தவம் செய்து பாவங்களைப் போக்கிக்கொண்டு அடுத்த பிறவியில் அந்தணனாகப் பிறந்து என்னையே தியானம் செய்து முக்தி அடையலாம் என்று கூறிவிட்டான். என்ன ஒரு பாரபட்சம் என்று தோன்றுகிறதல்லவா? உண்மையில் தனக்காக ஏங்கும் பக்தனுக்காக பகவானும் ஏங்குகிறான். அத்தகைய பக்தன் கிடைத்துவிட்டால் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் பிறவியைக் கொடுத்து அவர்கள் பக்தி பண்ணும் அழகை ரசிக்கிறான். அவர்களை வைத்து பக்தி செய்வது எப்படி என்று உலகோர்க்கு போதிக்கிறான். அசுரனுக்குப் பிறவி கொடுத்தால் அவனுக்கு பக்தி செய்யும் மனப்பக்குவம் எத்தனை பிறவிகள் கழித்து வருமோ? அதுவரை அந்த ஜீவனுக்காகக் காத்திருக்க வேண்டும். அம்மா மாடியில் துணி உலர்த்திக்கொண்டிருந்தாள். பள்ளியிலிருந்து வீடு திரும்பிய குழந்தை அம்மாவைத் தேடினால், மேலே இருக்கிறேன் வா என்று பதில் கொடுக்கிறாள். கீழே தொட்டிலில் உறங்கும் குழந்தை அழுதால் தானே ஓடி வருகிறாள். இரண்டுமே அவள் குழந்தைகள்தானே. அவளுக்கு பாரபட்சமா? ஒரு குழந்தைக்கு இறங்கி வருவதும