கிரிதர கோபாலா.. (11)
மீராவின் உடல்நிலை மோசமாகிக்கொண்டே போக மருத்துவர் வரவழைக்கப்பட்டார். குழந்தை கஷ்டப்படுவதைப் பார்த்து தாத்தாவும் அழ, அவளோ தாத்தா, அழாதீங்க. என் வியாதிக்கு இந்த வைத்தியமெல்லாம் பயன்படாது. இவருக்கு உள் மனத்தின் நோய் பற்றி தெரியாது. எப்படி மருந்து கொடுப்பார்? உனக்கென்னம்மா கஷ்டம்? தெரியாத மாதிரி கேக்கறீங்களே என்னால் கிரிதாரியை விட்டுட்டு ஒரு நிமிஷம்கூட இருக்கமுடியாது. நீங்க குறிச்சிருக்கற மணநாளில் நான் கிரிதாரியோடு சேர்ந்துவிடுவதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது. என்ன உளற்ற மீரா? நீ இப்படி பேசறதைக் கேட்கவா உன்னை கஷ்டப்பட்டு வளர்த்தேன்? எனக்கும் உன் விருப்பத்துக்கு மாறா நடக்க இஷ்டமில்லை. ஆனா, ராணாவுக்கு வாக்கு கொடுத்துட்டேனே. என்ன பண்றது? அவர் நம் மஹாராஜா. கல்யாண அழைப்பை அனுப்பிட்டு இப்ப மறுத்தா அவர் போருக்கு வருவாரோன்னு வேற பயமா இருக்கு. என்ன சொல்வதென்று தெரியாமல் இருவரும் அமைதியாகி விட்டனர். மருத்துவர் மீராவின் கையைப் பிடித்து நாடி பார்க்கக்கூட அவள் அனுமதிக்கவில்லை. என்னை இன்னொருவர் தொடலாகாது என்று சொன்னாள். வேறு வழியின்றி அவர் கண்ணால் பார்த்து மருந்து கொடுத்து விட்டுப் போனார். மூர்க் பைத் மர...