Posts

Showing posts from July, 2018

க்ருஷ்ணமாதுரி - 9

Image
மெய் வருத்தக்  கூலி தருமாம்  முயற்சி.. நீயோ.. என் முயற்சிகள் அனைத்தையும் கைவிட்டபின்பே வருகிறாய்.. முயற்சியின்றி  சுவாசமாய் உன் பெயர் ஓடுகிறது.. அதையும் விட்டுவிடவா? Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 8

Image
கடிதம் மின்னஞ்சல் அலைபேசி தொலைபேசி அத்தனையும்  உண்டு நான்  இருப்பதை எனக்குள் இருக்கும்  உனக்கு எப்படிச் சொல்வதென்றுதான் தெரியவில்லை.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 7

Image
வறண்டுபோன இலையில் சொட்டிய   உயிர்த்துளியாய் நீ.. புலன்களின் வெம்மையில் உலர்ந்துவிடாதே.. சற்றுப்பொறு.. மூடிக்கொள்கிறேன்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 6

Image
இங்கே மிகவும் புழுக்கமாய் இருக்கிறது.. நானே சுற்றிக்கொண்டதுதான்.. இப்போது இறுகிக் கூடாய்ப்போனது.. ஒருநாள் வாழ்ந்தாலும் வண்ணத்துப் பூச்சியாகவேண்டும்.. உன் மலர் முகத்தை அருகில் காண.. அதுவரை.. ஆதிசேஷனாய்  அழுத்தம் தாங்குவேன்.. Previous    Home     Next

க்ருஷ்ணமாதுரி - 5

Image
பற்றை விடவேண்டுமாம் உனையடைய.. எப்படி விடுவது? அன்றொருநாள் நீ பற்றிய  கரத்தைச் சுமக்கும் உடலையும் உன் எண்ணங்களையும் பற்றிக்கொண்டு ஏதோ வாழ்ந்துவிட்டுப்போகிறேன்.. நீயெனை முழுதாய்ப் பற்றும் வரை.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 4

Image
அடிவயிற்றிலிருந்து  நெஞ்சைக் கடந்து நாசியை அடைவதற்குள் நிகழும் போராட்டம் மாபாரதப்போரைவிடப் பெரியது.. உள்நுழைவதோ இன்னும் கடினம்.. நரம்புகளை நீவிவிட்டுக் கொண்டு நேற்று உள்நுழைந்த  நளினகாந்தி விடுபட்டுச் செல்லும்போது அவற்றைச்   சிக்கலாக்கிச் சென்று விட்டது. இன்றைக்கு விரலிசைக்கும் குழலிசையால் ஆவதொன்றுமில்லை.. சிக்கல் தீர்க்க குழலிசைக்கும்  விரல் வேண்டும்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 3

Image
காலதர்களின் வழியே எட்டி எட்டிப் பார்ப்பதில் தான் உனக்கு எவ்வளவு ஆனந்தம்.. உனக்கான  ப்ரதான வாயிலை அடைய நகரும் ஏணியின்  முதல் படி ஏறினால் போதும். காத்திருக்கிறது ஆயிரம் இதழ்கள் கொண்ட  ஒற்றைப்பூ.. கருத்துத் தூண்டல் Rishaban Srinivasan Previous    Home    Next

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (20)

Image
நாரதர் விஸாசரிடம் சொல்வதாக அமைந்துள்ள ஸ்லோகங்களுள் ஒன்று एतद्ध्यातुरचित्तानां मात्रास्पर्शेच्छया मुहुः । भवसिन्धुप्लवॊ दृष्टॊ  हरिचर्यानुवर्णनम् ।। ஏதத்த்யாதுரசித்தானாம் மாத்ராஸ்பர்ஶேச்சயா முஹு:| பவஸிந்துப்லவோ த்ருஷ்டோ ஹரிசர்யாநுவர்ணநம் || (ஸ்ரீமத் பாகவதம் 1:6:35) இவ்வுலகியல் இச்சைகளுக்கு ஆட்பட்டுத் தவிக்கும் மாந்தர்களுக்கு இந்த துக்கமயமான  ஸம்ஸாரத்தைக் கடக்க பயன்படும் தோணியாக விளங்குவது,  பகவானின் திருவிளையாடல்களைக் கேட்பது ஒன்றேயாகும். Audio link https://drive.google.com/file/d/1ORWvFl_o2WVeYs7T7H-ieX6l36OOcIFJ/view?usp=drivesdk

க்ருஷ்ணமாதுரி - 2

Image
மண்ணுக்கிரையாகும் மல உடலை எடுத்துவிட்டு விண்ணுக்குத் தலைவன் உன்  வலதுகரம் பிடித்திடவே பேராசை கொண்டு பெருமிதத்தில் அலைகின்றேன். பேதைகளின் தலைமகளாய் பேயாட்டம் போடுகிறேன்.. எண்ணிலா என் சிறுமைகளை எண்ணி எள்ளி நகையாமல் அள்ளிக் கைக்கொள்ளலே உன் பெருமைக்கழகாமே. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 1

Image
கண்மூடி நதிக்கரையில் அமர்ந்திருக்கின்றேன். நதியின் சலசலப்பு உன் நூபுரமாய் இசைக்கிறது.. தடவிப்போகும் தென்றலில் என் தோட்டத்து மகிழம்பூவின் வாசம்.. என் கண்களை நீ திருடிக்கொண்டாய் அவற்றின் வேலையைக் காதுகள் செய்கின்றன.. திடீரென்று  கன்னத்தில் ஈரம்.. பறந்துவந்து கன்னம் தொட்டுப் போகிறது மயில்பீலி.. உன் குழலிசைக்காகவே  காத்திருக்கிறேன். வந்ததும் அதிலேறி உன்னிடம் வருவேன்.. Home   Next

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (19)

Image
न ह्यतोsन्यः शिवः पन्था विशतः संसृताविह । वासुदेवे भगवति भक्तियॊगॊ यतॊ भवेत्।। ந ஹ்யதோsன்ய: ஶிவ: பந்தா விஶத: ஸம்ஸ்ருதாவிஹ| வாஸுதேவே பகவதி பக்தியோகோ யதோ பவேத்|| (ஸ்ரீமத் பாகவதம் 2:2:33) இந்தப் பூவுலகில் விழுந்து தவிக்கும் ஒருவனுக்கு நன்மையளிக்கும் வழி  ஒன்றேயாகும்.  அது, பகவான் வாசுதேவனிடம் அன்புடன் பக்தி செய்யும் வழியே. அதைத் தவிர வேறு வழி இல்லை. Thanks to  Subashree Venkatraman for the audio https://drive.google.com/file/d/1HGZ6ZFjpqfDbQk3YhGNoTbji-J5HIEe-/view?usp=drivesdk

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (18)

Image
नोत्तमश्लोकवार्तानां जुषतां तत्कथामृतम् । स्यात्सम्भ्रमोsन्तकालेsपि स्मरतां तत्पदाम्बुजम् ।। நோத்தமஶ்லோகவார்தாநாம் ஜுஷதாம் தத்கதாம்ருதாம் | ஸ்யாத்ஸம்ப்ரமோsந்தகாலேsபி ஸ்மரதாம் தத்பதாம்புஜம்|| (ஸ்ரீமத் பாகவதம் 1:18:4) மிகவும் கீர்த்தி வாய்ந்த பகவானது திருவிளையாடல்களைப் பற்றியே கேட்பவர்களும், பேசுபவர்களும், அவனது திருவடித் தாமரைகளையே எப்போதும் நினைத்து உருகுபவர்களும் மரணகாலத்தில் கூடக் கலங்குவதில்லை. Audio https://drive.google.com/file/d/18uNtUkdr1rmmUD_8fKm1JzpHBZZCif2z/view?usp=drivesdk