குருவருள் ஒன்றே கதி - 24

குருவின் பொறுமை தற்போது பைடன் என்றழைக்கப்படும் ப்ரதிஷ்டானபுரத்தில் ஒருவன் வசித்து வந்தான். வேலை வெட்டி ஒன்றும் பார்ப்பதில்லை. மிகவும் சோம்பேறி. எப்போதும் கோதாவரி நதிக்கரையிலிருந்த ஒரு மண்டபத்தில் அமர்ந்து நண்பர்களுடன் சூதாடிக்கொண்டிருப்பான். இப்படி இருந்தபோதிலும், அவனிடம் ஒரு பழக்கம் இருந்தது. அவ்வூரில் வசித்து வந்த மஹாத்மாவான ஸந்த் ஏகநாதரை தினமும் ஒருமுறையாவது தரிசித்துவிடுவான். ஒருநாள் அவன் சூதாட்டத்திற்கு மிகவும் தாமதமாக வந்தான். அவனது நண்பர்கள், ஏனடா, இவ்ளோ நேரமா? அப்படி என்ன வேலை? சீக்கிரம் வந்தாத்தானே ஆட்டத்தை ஆரம்பிக்கலாம். இல்லடா, கொஞ்ச நேரமாயிடுச்சு. அதான் வந்துட்டேன்ல. ஆட்டாம் ஆரம்பிக்கலாம். இருடா, அப்படி என்ன வேலை உனக்கு? ஏன் இவ்ளோ நேரம்? சொல்லு. நாங்களும் தெரிஞ்சுக்கறோம். சொன்னாத்தான் மேல இன்னிக்கு ஆட்டம். அதுவா.. சற்று தயங்கினான். சொல்லுடா.. இந்த ஊர்ல ஏகநாதர்னு ஒரு மஹாத்மா இருக்காரே. தினமும் அவரைப் பாத்து வணங்கிட்டுத்தான் வருவேன். இன்னிக்கு அவர் வெளில வர தாமதமாயிடுச்சு. இருந்து பாத்துட்டு வந்தேனா. அதான். ...