Posts

Showing posts from February, 2020
Image
  இனிதான இசை எந்தன் செவியேறுமோ நான் இங்கு நீயாகும் நாள் வருமோ மாயை தன் பிடி என்று எனை விடுமோ மயக்கும் உன் புகழில் என் மனம் மாயுமோ உன் பெயரே எனதென்று வழக்காகுமோ உயிர் உருகி உன் கழலைத் தழுவிடுமோ செயல் எல்லாம் உனதாக மாறிடுமோ செலவின்றி சிந்தை என்று அடங்கிடுமோ Image courtesy: Kanha

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில‌ ரத்தினங்கள் (24)

Image
தா⁴நவ்ரத தபோஹோம ஜபஸ்வாத்⁴யாய ஸம்யமை: | ஶ்ரேயோபி⁴ர் விவிதை⁴ஶ்சான்யை: க்ருஷ்ண ப⁴க்தி:ஹி ஸாத்⁴யதே|| (ஸ்ரீமத் பாகவதம் 10:47:24) தானம், விரதம், தவம், ஹோமங்கள், ஜபம், வேதம் ஓதுதல், புலனடக்கம் ஆகிய உயர்ந்த நியமங்களின் பயனாக ஒருவனுக்கு ஸ்ரீ க்ருஷ்ணனிடம் பக்தி ஏற்படுகிறது.

கிரிதர கோபாலா.. (36)

Image
ஸாதுக்களுடன் துவாரகையை நோக்கிக் கிளம்பினாள் மீரா. வழியெங்கும் பெரும்  மக்கள் கூட்டம் மீரா மாதா, மீரா மாதா என்று வாஞ்சையுடன் கூறிக்கொண்டு இணைந்துகொண்டனர். ஒவ்வொரு ஊராகத் தங்கி கீர்த்தனம் செய்துகொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் புஷ்கர் எனப்படும் க்ஷேத்ரத்தைக் கடந்து சென்றதாக செவி வழிச் செய்தி ஒன்று சொல்கிறது. தீர்த்தராஜ் என்றழைக்கப்படும் புஷ்கர் என்பது பெரிய ஏரியாகும். அங்கு தீர்த்த ரூபத்தில் பகவான் விளங்குகிறான். புஷ்கர் ஏரியின் கரையில் மீரா தங்கிய இடம் உள்ளது. அந்த ஆசிரமம் மிக அழகாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கே மிக அழகான கிரிதாரியின் மூர்த்தி உள்ளது. அங்கிருந்து கிளம்பும்போது, மீரா தன் கிரிதாரியை அங்கே வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறி வழிபாடு செய்து வருகின்றனர். ஒரு வாறாக, சில மாதங்களில் துவாரகையை அடைந்தார்கள். தன்‌மீது அளவற்ற அன்பு கொண்டு தொடரும் லட்சக்கணக்கான மக்களைப் பார்த்து, கிரிதாரியின் லீலையை நினைத்து வியந்தாள் மீரா.  துவாரகையில் கண்ணனின் கோவிலின்  முன் நின்றனர். வானளாவிய கோபுரம்! பெரிய வாயிற்கதவுகள்‌ மூடிக்கிடந்தன. எத்தனை காலமாயிற்றோ! அதுவர...

கிரிதர கோபாலா.. (35)

Image
நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டு தன்னை நோக்கி வந்த ஸாதுக்கள் கூட்டத்தைப் பார்த்தாள் மீரா. அவர்களுள் ஒருவர் மீராவிடம் வந்து, அம்மா! இங்கே கண்ணனின் பரம பக்தையான மீரா மாதா என்றொருவர் இருக்கிறாராமே. அவர் எங்கிருக்கிறார் தெரியுமா? என்றார். என்ன விஷயம்? நீங்கள் எதற்காக அவர்களைத் தேடுகிறீர்கள்? குழந்தை தாயைத் தேடக் காரணம் வேண்டுமா அம்மா? நாங்கள் அவரைச் சந்தித்து வணங்க விரும்புகிறோம். மீரா சட்டென்று அவர்கள் அனைவரையும் வணங்கினாள். நான் தான் மீரா. கண்ணனின் அடிமை. நான் தங்களுக்கு என்ன ஸேவை செய்ய வேண்டும்? மீரா மாதா கீ! ஜெய்! என்ற கோஷத்துடன் அனைவரும் மீராவை வணங்கினர். மீராவிற்கு சங்கோஜமாக இருந்தது. மீண்டும் ஒரு ஸாது பேசலானார். அம்மா! நீங்கள் எங்கள் ஊருக்கு வரவேண்டும். தங்கள் அன்பிற்கு நன்றி. ஆனால், ப்ருந்தாவனத்தை விட்டு வெளியில் வரமாட்டேன். அம்மா! நீங்கள் அப்படிச் சொல்லலாகாது. அதுவும் கண்ணனின் ஊர்தான். இருக்கலாம். எல்லா ஊரும் ப்ருந்தாவனமாகாது. நீங்கள் ஒரே ஒரு முறை வந்துவிட்டுத் திரும்பி ப்ருந்தாவனம் வந்து விடுங்களேன். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? நாங்கள் கண்ணனின் மதிப்புமிக்க அரசபீட...

கிரிதர கோபாலா.. (34)

Image
ஒருநாள் மீரா வம்சீவடத்தின் அடியில் அமர்ந்திருந்தாள். கண்ணன் தினமும் அமர்ந்து குழலூதும் மரம் வம்சீவடம். இங்கே நடந்த லீலைகள்தான் எத்தனையெத்தனை! இம்மரத்தின் தாழ்வான கிளையில் ஒரு காலை மடித்து அமர்ந்து ஒயிலாக மரத்தின் மீது சாய்ந்துகொண்டு, அவன் குழலூதும் காட்சி மீராவின் கண்கள் முன் விரிந்தது. தன்னை மறந்து கண்ணனின் லீலைகளில் மூழ்கிப் பாடிக்கொண்டிருந்தாள். கண்ணன் திடீர் திடீர் என்று எப்போது வேண்டுமானாலும் குழலூதுவான். அவனது குழலிசை கேட்டால் இடைச்சேரியில் ஒரு பெண்ணுக்கும் வேலை ஓடாது. அப்படியே கல்லாய்ச் சமைந்துபோவார்கள். இதனால், அவர்களது வீடுகளில் அவர்களுக்கு வசவு விழும்.‌ எனவே, அனைவரும் சேர்ந்து பேசி ஒரு முடிவு செய்தனர். தினமும் ஏதாவதொரு குறிப்பிட்ட நேரத்தில் கண்ணனைக் குழலூதும்படி வேண்டலாம். அது தெரிந்தால் வீட்டு வேலைகளை அதற்குள் முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்தனர். ஆனால், கண்ணனிடம் பேசப்போனால், அவன் வாய்க்கு வாய் வம்பிழுப்பான். அவன் அழகில் மயங்கி ஏதாவது உளறிக்கொட்டிவிடுவோம் என்றும் பயந்தனர். எனவே ராதையை சமரசம் பேச அனுப்பினார்கள். ராதாராணி தன்னுடன் பேச வருகின்றாள் என்பதே கண்ணனுக்குப் பரவசம் தர...

கிரிதர கோபாலா.. (33)

Image
ஜீவ கோஸ்வாமி என்ற ஸாதுவும் மீராவும் சம காலத்தவர். ஜீவ கோஸ்வாமி ப்ருந்தாவனத்தில் ஒரு ஆசிரமம் அமைத்து, கண்ணனை ஆராதித்து வந்தார். அவரது மனத்தில் ஒரு ஊஞ்சல் இட்டு, அதில் ராதாக்ருஷ்ணனை அமர்த்தியிருப்பார். எப்போதும் அவர்கள் ஊஞ்சலில் ஆடும் காட்சி அவரது மனக்கண்களுக்குப் புலனாகிக்கொண்டிருந்தன. அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தனர். ஒரு சமயம் மீரா அவரைக் காண்பதற்காக அவரது ஆசிரமத்திற்குச் சென்றாள். வாசலிலேயே ஜீவ கோஸ்வாமியின் சீடர்கள் மீராவை நிறுத்தினர். ஸ்வாமியை தரிசனம் செய்யவேண்டும் என்று மீரா கேட்டபோது,  எங்கள் குரு பெண்களைப் பார்ப்பதில்லை என்று கூறினர். அவ்வளவுதான். மீரா சட்டென்று பின்வாங்கினாள். ஓ! இந்த ப்ருந்தாவனத்தில் கண்ணன் ஒருவன்தான் புருஷன்,‌ புருஷோத்தமன் இருக்கிறான், மீதி அனைவரும் பெண்கள் என்று எண்ணியிருந்தேனே.  இங்கு இன்னொரு ஆண்மகன் இருக்கிறாரா..  எனில் அத்தகையவரைக் காண எனக்கும் விருப்பமில்லை. கண்ணனைத் தவிர வேறொரு ஆணை நானும் பார்க்க விரும்பவில்லை. என்று கூறித் திரும்பிச்  சென்றுவிட்டாள். உள்ளே நிகுஞ்ச த்யானத்தில் இருந்த ஜீவகோஸ்வாமியின் ஹ்ருதயத்திலிருந்து கண்ண...

கிரிதர கோபாலா.. (32)

Image
யமுனா தேவியால் ப்ருந்தாவனத்தில் கொண்டு சேர்க்கப்பட்ட மீராவை ஸந்த் ரயிதாஸ் அடையாளம் கண்டுகொண்டார். ஸாதுக்கள் அனைவரும் சேர்ந்து  மூர்ச்சையடைந்திருந்த மீராவை எழுப்ப நாமஸங்கீர்த்தனம் செய்தனர். உணர்வு வந்ததும் தன்னைச் சுற்றி ஸாதுக்களைப் பார்த்ததும் மீராவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை.  நான் எங்கிருக்கிறேன்? ப்ருந்தாவனம்.. ப்ருந்..தா..வ..ன..மா? மறுபடி மூர்ச்சையானாள். மீண்டும் நாமசங்கீர்த்தனம் தொடர்ந்தது. இப்படியே உணர்வு வருவதும், ப்ருந்தாவனத்தில் இருக்கிறோம் என்ற நினைவு வந்ததும் மறுபடி  மூர்ச்சை அடைவதுமாக ஏழு நாள்கள் ஓடின.  ஏழு நாள்கள் கழித்து ஓரளவு சமநிலைக்கு வந்த மீரா, கதறி அழத் துவங்கினாள். ஓ! குருநாதா! சின்னஞ்சிறு வயதில் தாங்கள் என் ஹ்ருதயத்தில் விதைத்த ப்ரேமையின் பலனாக இன்று கிரிதாரி என்னை ப்ருந்தாவனத்திற்கு அழத்துக்கொண்டு விட்டான். என் மீதான தங்களின்  கருணைக்கு அளவே இல்லை. குழந்தாய்! மீரா! கிரிதாரிதான் உன்னை எனக்கு அறிமுகப்படுத்தினான். உன்னுடைய பக்தியில் சிறிதளவாவது எனக்கும் கிடைக்க அவன்தான் அருள் செய்யவேண்டும். மீராவிற்கு ப்ருந்தாவனத்தில் சில வருடங்கள் மிக அமைதியா...