பூமியைப் பிளந்துகொண்டு கஷ்டப்பட்டுத் தலைநீட்டும் சிறு புல்லைப் போன்றது உன் மீதான என் நம்பிக்கை.. இனி.. அது மரமாய் வளர்வது உன் அரவணைப்பினால்தான்..
Posts
Showing posts from April, 2019
- Get link
- X
- Other Apps
உறங்கும் நேரம் நினைவாய் நிற்கும் நீ.. விடிந்ததும் என்னை எழுப்பி இப்பாழும் உலகில் தள்ளிவிட்டு எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறாய்.. உன் பார்வை என்னை வழுக்கும் விஷய விஷங்களுக்குள் விழாமல் காத்தபோதும் உன் கரம் பிடித்து நடக்க மனம் ஏங்குகிறது.. https://scontent.fmaa6-1.fna.fbcdn.net/v/t1.6435-9/57581506_10157339411966757_4139913448991490048_n.jpg?stp=dst-jpg_s720x720&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=J2LEK8zyhagAX_hk85m&_nc_ht=scontent.fmaa6-1.fna&oh=00_AT8dM83ru_uPZpZN_GJRFRJta95e7Eylmih0P6k3Q8uYSg&oe=62D8386C
- Get link
- X
- Other Apps
நீ இங்கேதான் இருக்கிறாய்.. தென்றல் சுமந்து வரும் துளஸியும் மகிழம்பூவும் கலந்த நறுமணம்.. நேற்று வாடத்துவங்கியிருந்த புற்கள் பசுமை போர்த்தி இன்று நிமிர்ந்து நிற்கின்றன.. யமுனையின் துள்ளல் நேற்றைவிட அதிகமாய்.. மரக்கிளைகள் நீ தடவிச்செல்ல வாகாய்த் தழைந்திருக்கின்றன.. இம்மலர்கள் வழக்கத்தை விடச் சற்று பெரியதாய்.. நீ இங்கேதான் இருக்கிறாய்.. எனக்குத் தெரியும்.. என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்பதும் தெரியும். எனக்கது போதும்.. நான் உன்னைப் பார்க்காவிடில் என்?
ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் ( 23)
- Get link
- X
- Other Apps
ஸாங்கேத்யம் வா பாரிஹாஸ்யம் வா ஸ்தோப4ம் ஹேலனமேவ வா | வைகுண்ட2நாமக்3ரஹணம் அஶேஷாக4 ஹரம் விது:3|| (ஸ்ரீமத் பாகவதம் 6:2:14) உலகியல் வேலைக்காக ஏதோ காரணமாக எதையாவது நினைத்துக் கொண்டோ, ஜாடையாவோ, பாடும்போது ஆலாபனை முற்றுப்பெறவோ, பிறரை அழைக்கவோ, ஏளனம் செய்யவோ, எவ்வாறாகிலும் பகவன் நாமத்தை ஒருவர் உச்சரிப்பாராகில், அவரது பாவங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன. படம் : ஸ்ரீ சதுர்புஜ நாதர், மெர்டா நகரம், ராஜஸ்தான்.