கொஞ்சம் சிரிப்புகொஞ்சம் சிந்தனை - 5
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில் சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவ்ற்றுள் சில இங்கே
சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும் பகிரப்படுகின்றன.
ஒரு சமயம், ஒரு சின்னக் குழந்தை கையில் ஒரு க்ருஷ்ணன் படத்தோடு ஸ்வாமிஜியிடம் சென்றாள். இரண்டு வயதிருக்கலாம் அவளுக்கு.
படத்தை ஸ்வாமிஜிடம் கொடுத்தாள். மிக அழகாக இருந்த அந்தக் கண்ணனை சற்று நேரம் பார்த்துக் கொண்டே இருந்தார் ஸ்வாமிஜி.
பின்னர் அவளிடம் கேட்டார்,
இது யாரு?
குழந்தை மழலை முற்றாத சொற்களால் சொன்னது.
கிட்டா..
ஸ்வாமிஜியின் இதழ்கள் புன்னகையால் விரிந்தன.
கிட்டாப்பொருளில்லை. கிட்டும்..
என்று சொல்லிச் சிரித்தார்.
அதிலிருந்து அந்தக் குழந்தை யார் வந்து அந்தப் படத்தைக் காட்டிக் கேட்டாலும் கிட்டும் என்றே சொல்வாள்.
உண்மைதானே.. குருநாதர் கொடுத்தால் கிட்டும் பொருள்தானே அந்தக் கண்ணன்?
Comments
Post a Comment