கொஞ்சம் சிரிப்புகொஞ்சம் சிந்தனை - 1
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில் சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவ்ற்றுள் சில இங்கே
சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும் பகிரப்படுகின்றன.
ஒரு சிலருக்கு அவர்கள் அவர்கள் எதை அடிக்கடி சொல்கிறார்களோ அதுவே பெயராகிவிடுகிறது.
உதாரணத்திற்கு வாசலில் தலைமீது கூடை நிறைய கத்தரிக்காயை சுமந்துகொண்டு விற்க வரும் பெண்ணை,
ஏ கத்தரிக்கா என்று கூப்பிட்டால் அவள் மகிழ்ந்துபோய் அருகில் வருகிறாள். உண்மையில் அவளா கத்தரிக்காய்?
ஒரு பத்து நிமிஷம் அவள் கத்தரிக்கா கத்தரிக்கா என்று கூவியதற்கே அவள் பெயர் கத்தரிக்காய் என்றாகிவிடுகிறது.
துடைப்பம் விற்க வரும் வியாபாரிக்கும் அதுதான் பெயர். அவரும் கோபம் கொள்வதில்லை.
எனவே நாம் அடிக்கடி சொல்லும் வார்த்தை எதுவோ அதுவே நமக்குத் தெரியாமலே நமது பெயராகிவிடும் வாய்ப்புள்ளது.
எனவே, பேசும் சொற்களில் கவனம் தேவை.
உலக விஷயங்களுக்கே இப்படி என்றால், இறைவன் பெயரைச் சொல்லிக்கொண்டே இருந்தால் நமது பெயர், நிலை, உருவம் எல்லாம் இறைவனாக மாறிவிடுமல்லவா?
Comments
Post a Comment