ப்ருந்தாவனமே உன் மனமே - 60
கண்ணனின் வாழ்வில்தான் எத்தனை எத்தனை துயரங்கள்? இன்னும் சொல்லப்போனால் ராமாவதாரத்தைக் காட்டிலும் க்ருஷ்ணாவதாரத்தில் அதிகமான துயரச் சம்பவங்கள். 125 வருடங்கள் இந்த பாரத தேசத்தில் வாழ்ந்த கண்ணன் பூலோகம் மட்டுமல்லாது, ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் சென்று தன் பாதங்களைப் பதித்துவிட்டிருக்கிறான். சிறையில் பிறந்து, பெற்ற தாய் தந்தையரைப் பிரிந்து, வேறோரிடத்தில் வளர்ந்தான். அங்கும் அவனுக்கு தினம் தினம் கொலை அச்சுறுத்தல்கள். வளர்த்தவர்களைப் பிரிவதைப் போல் கொடுமை உண்டா? சரி, மதுராவிலாவது நிம்மதியான வாழ்வா என்றால், கம்சனைக் கொன்றதற்காக அவனது மாமனார் ஜராசந்தன் பதினேழு முறை படையெடுத்து வந்தான். ஒவ்வொரு முறையும் ஜராஸந்தனை மட்டும் உயிரோடு விட்டு, அவனது சைன்யங்களை நிர்மூலமாக்கினான் கண்ணன். அடிக்கடி போர் வந்துகொண்டேயிருந்ததால், வாழுமிடத்தை விட்டு அவ்வளவு பேரையும் கடலுக்குள் துவாரகா நகரம் நிர்மாணித்து குடியேற்றினான். ருக்மிணியோடு விவாஹம் நடந்தது. ஆனால், அவனை மாமனார் வீட்டில் அழைத்து மரியாதை செய்தவர் உண்டா? வீண்பழி வேறு சுமந்தானே? எவ்வளவு அசுரர்கள்? மஹாபாரதத்தின் சூத்திரதாரியாய் இருந்து எவ்வளவு காரியங்