குருவருள் ஒன்றே கதி - 1
குரு நமது கண்ணுக்குப் புலப்படுவதற்காக எளிமையாய் மனித உருக்கொண்டு வந்த தெய்வமாவார்.
குருவின் அருள் இருந்தால் ஒருவன் எத்தகைய கடினமான செயலையும் எளிதாகச் செய்து முடிப்பான்.
குருவின் பெருமையை கண்ணன் குசேலனிடம் பேசும்போது சொல்கிறான்
இத்தம் விதான்யனேகானி வஸதாம் குருவேஷ்மஸு
குரோரனுக்ரஹேணைவ புமான் பூர்ண: ப்ரஷாந்தயே..
(ஸ்ரீ மத் பாகவதம் 10:81:43)
நான் அரசனாக இருந்தபோதிலும் சரி, நீ வறுமையில் வாடும்போதும் சரி, இருவருமே மன நிம்மதியோடு வாழ்கிறோம். காரணம் என்ன தெரியுமா?
குருகுலக்கல்வி முடிந்து கிளம்பும்சமயம், நமது குருவான சாந்தீபனி நம்மைப் பார்த்து உளமுவந்து மனமார ஆசீர்வாதம் செய்தார். அவரது அனுக்ரஹத்தாலேயே, பதவியோ, பணமோ, வறுமையோ நம் இருவரின் நிம்மதியையும் பாதிக்கவில்லை.
என்கிறான்.
குருவின் அருள் சொல்லுக்கெட்டாததுதான். எனினும் இறைவன் கொடுத்த வாக்கு பயனுற, இயன்றவரை
அனுபவிப்போம்.
குழந்தையின் மழலை கேட்டு அன்னை மகிழ்வதுபோல், குரு நமது நற்செயல்களால் மகிழ்வார்..
Comments
Post a Comment