மதுரா நாயகா.. (3)
கண்ணனைப் பிரிய மனமின்றிச் சென்ற அக்ரூரர், கம்சனிடம் சென்று கண்ணன் மதுரைக்குள் வந்துவிட்ட செய்தியைத் தெரிவித்துவிட்டு வீட்டுக்குப் போனார். மாட்டு வண்டிகளில் நந்தகோபரும், சில கோபர்களும், கோபச் சிறுவர்களும் மதுரா வந்தடைந்தனர். நிறைய மாட்டு வண்டிகள் வருவதைப் பார்த்து அவர்களை அழைத்துக்கொண்டு வந்தான் பலராமன். ஊரைச் சுத்திப் பாக்கலாம் வாங்கடா.. என்று கண்ணன் கிளம்ப, அவன் பின்னால் இடைச் சிறுவர் படை கிளம்பியது. பத்திரமா இருக்கணும் கண்ணா என்று எச்சரித்துவிட்டு, நந்தகோபர் தன் வீரர்களுடன் நண்பரான வசுதேவரைப் பார்க்கப் போனார். மிக அழகான நகரம் மதுரா. பளிங்குக் கற்களாலான உயர்ந்த கோபுரங்கள், நகர வாயில்கள். தங்கத்தாலான பெரும் கதவுகள், நிரம்பி வழியும் தானியக் களஞ்சியங்கள், பெரிய, உயர்ந்த வகைக் குதிரைகளைக் கொண்ட குதிரை லாயங்கள், ஆங்காங்கே உள்கோட்டை மதில்கள், அவற்றைச் சுற்றி அகழிகள், பழத்தோட்டங்கள், பூந்தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள், அழகழகான மாளிகைகள், தொழில்வாரியாகப் பணிமனைகள் அமைந்த தெருக்கள், ரத்தினங்கள், பவளம், முத்து, மரகதம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட வீட்டுத் தூண்கள்.. ஜன்னல்களிலும், ...