கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் சிந்தனை - 21
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில் சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும் பகிரப்படுகின்றன. அர்ஜுனனின் பேரனும் அபிமன்யுவின் புதல்வனுமான பரீக்ஷித் ஒருவன்தான் பாண்டவ வம்சத்தின் ஒரே வாரிசு. கண்ணன் அவதாரத்தை முடித்துக்கொண்டு பூமியை விட்டுக் கிளம்பியது முதல் கலியுகம் ஆரம்பித்தது. ஆங்காங்கே கலியின் தோஷத்தால் நேர்ந்த கொடுமைகளைப் பார்த்த பரீக்ஷித், பூமி முழுவதும் யாத்திரை செய்து கலியின் கொட்டத்தை முழுவதுமாக அடக்கினான். ஒரு சமயம் ஒரு காளை மாட்டின் மூன்று கால்களும் வெட்டிவிட்டு அதன் நான்காவது காலையும் வெட்டுவதற்காக கையில் வாளை வைத்துக் கொண்டிருந்த ஒருவனை பரீக்ஷித் சந்தித்தான். காளையின் அருகே ஒரு பசுவும் மிகவும் தீனமாக அழுது கொண்டிருந்தது. பார்ப்பதற்கே அருவருக்கத்தக்க நிலையில் இருந்த அம்மனிதன் அரச வேஷத்தில் இருந்தான். வாயில்லாத ஜீவன்களைத் துன்புறுத்துவதைக் கண்ட பரீக்ஷித் வெகுண்டு, அம்மனிதனை கொல்லத் துணிய, அவனோ பரீக்ஷித்தின் பாதங்களில் விழுந்து உயிர