கொஞ்சம் சிரிப்புகொஞ்சம் சிந்தனை - 14
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில் சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும் பகிரப்படுகின்றன. மிகவும் சிஷ்டரான ஒரு பெரியவர் இருந்தார். அவர் ஸேது ஸமுத்திரக்கரையில் அனுஷ்டானங்களைச் செய்வதற்காகச் சென்றிருந்தார். பெரியவர்கள் எப்போதும் கையில் தீர்த்த பாத்திரம் வைத்திருப்பார்கள். தீர்த்தம் என்பது கவசம் போன்றது. அவர்களது ஜப சக்தியை சேமித்து வைக்கவும், மற்றவர்களுடைய எண்ண அலைவரிசை தம்மை பாதிக்காமல் இருப்பதற்கும் தீர்த்தம் பயன்படுகிறது. துரத்தப்படும் ஒரு திருடன் நடுவில் மழையில் நனைந்தாலோ, அல்லது ஒரு குளத்தில் இறங்கிவிட்டுச் சென்றாலோ அவனை மோப்பநாயால் தொடர இயலாமல் போவதை நடைமுறையில் பார்க்கிறோம். ஏனெனில் அவனது அலைவரிசை அந்த நீரோடு அறுபட்டுவிடுகிறது. இப்போது அந்தப் பெரியவரைப் பார்க்கலாம். அவர் ஸமுத்திரத்தில் ஸ்நானம் செய்வதற்காக இறங்கினார். தீர்த்த பாத்திரத்தை கடலில் விட்டுவிடுவோமோ என்று யோசனை வந்தது. அதைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிக் கரை...