திருக்கண்ணன் அமுது - 19
அழகும் ஆபத்தும்
யசோதையின் கால்களுக்கிடையே விழுந்து கிடக்கும் பரம்பொருள் தலை நிற்காமல் அவ்வப்போது முட்டிக்கொண்டு, மூக்கை நசுக்கிக்கொண்டு அழுது, அப்பப்பா..
ஸௌலப்யத்தின் சிகரம் இந்தக் கண்ணன்.
திடீரென்று தேவகியின் வயிற்றில் குழந்தை மறைந்தது. அதே சமயம் நந்தன் வீட்டில் அடைக்கலமாய் வசிக்கும் வசுதேவரின் மனைவியான ரோஹிணியின் வயிற்றில் திடீரென்று ஒரு குழந்தை வந்துவிட்டது.
ஒற்றர் மூலம் இந்த விஷயத்தை அறிந்த வசுதேவர், இது இறைவனின் திருவுளமென்று புரிந்துகொண்டு அமைதியாய் இருந்துவிட்டார்.
நந்தன் தன் நண்பரான வசுதேவரைப் பார்த்து, ரோஹிணியின் குழந்தையைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்துவிட்டு, அப்படியே கண்ணன் பிறந்த சேதியையும் சொல்லிவிட்டு வரலாம் என்று மதுரா கிளம்பிச் சென்றார்.
கம்சனின் விசேஷ மந்திரிகளுள் ஒருத்தியான பூதனை என்பவள் மிக அழகானவள் போல் உருக்கொண்டாள். மதுராவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கடந்த ஒரு மாதத்திற்குள் பிறந்த குழந்தைகளின் வீடுகளுக்கெல்லாம் சென்றாள். பால் கொடுக்கும் சாக்கில், ஒவ்வொரு குழந்தையாகக் கொன்று கொண்டிருந்தாள்.
இப்படியாக, அவள் இப்போது நந்தகிராமத்திற்குள்ளும் வந்துவிட்டாள்.
விசாரித்ததில் நந்தனுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருப்பதை அறிந்து நந்தன் அரண்மனை வாயிலில் நின்றாள்.
அவளைக் கண்டதும் கோபிகள் மகிழ்ந்து போனார்கள். காரணம் பூதனா, மிக மிக அழகான உருவம்கொண்டு வந்திருந்தாள்.
அழகிருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்பதை உணராமல், அந்த வெள்ளைமனமுடையோர் அவளை வரவேற்றனர்.
நந்தராஜா பையன் எவ்ளோ அழகு! அதைப் பாக்க மஹாலக்ஷ்மியே வந்துட்டாங்க போல.
அலர்மேல் மங்கையோ என்னும் அளவிற்கு அரக்கியின் வேஷம் பொருந்தியிருந்தது.
வாங்கம்மா...
நந்தராஜாவுக்கு குழந்தை பிறந்திருக்காமே. குழந்தையைப் பாக்கலாம்னு வந்தேன். நான்
நந்தராஜாவின் நண்பரின் மனைவி.
வாங்க வாங்க
விபரீதம் புரியாமல் அவளை உள்ளே அழைத்துக்கொண்டு போனார்கள் கோபிகள்..
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment