நயனபாஷை
தோட்டத்திலிருந்த இரட்டை மருத மரங்களைச் சுற்றிச் சுற்றி கன்றுக்குட்டியின் வாலைப் பிடித்துக் கொண்டு ஓடி க் கொண்டிருந்தனர் கண்ணனும் பலராமனும். யச்சொதையும், மற்ற கோபிகளும் தானியங்களை இடித்துப் புடைத்து வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது மிகுந்த வேகத்துடனும் கோபத்துடனும் வந்த கிரிஜாவைப் பார்த்ததுமே புரிந்துகொண்டாள் யசோதை, அவள் புகார் சொல்லத்தான் வந்திருக்கிறாளென்று. திரும்பிக் கண்ணனைப் பார்த்தாள்.
ஏதேனும் விஷமம் செய்தாயா? என்றவள் கண்கள் வினவ, ஓடிக் கொண்டிருந்த கண்ணன் ஒரு கணம் நின்று இல்லவே இல்லையம்மா.. என்று விழிகளாலேயே பதில் சொல்லிவிட்டு மீண்டும் ஓடத்துவங்கினான்.
தாய்க்கும் சேய்க்கும் இடையே உள்ள நயனபாஷை சிலசமயங்களில் தந்தைக்கே விளங்காத போது மற்றவர்க்கெப்படிப் புரியும்?
புன்னகையோடு புகார் சொல்ல வந்த கோபியை எதிர்கொண்டாள் யசோதா.
Comments
Post a Comment