பிறந்தநாள் வருது
அடுத்த வாரம் கண்ணனின் பிறந்த நாள் வருகிறது. நமது பிறப்பறுக்க வந்த பிறப்பற்றவனுக்குப் பிறந்த நாள் என்பதே சிறப்பு..
கோகுலம் தயாராகிக் கொண்டிருக்கிறது. நந்தன் அரண்மனையிலும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. யசோதை பரபரப்புடன் அங்குமிங்கும் நடந்து ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டு, ஆட்களை வேலை வாங்கிக் கொண்டிருக்கிறாள்.
ஒன்றுமறியாதவன்போல் அவள் புடவைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு இரண்டு விரல்களை வாய்க்குள் போட்டுக்கொண்டு அவள் பின்னாலேயே போய்க்கொண்டிருக்கிறான் நமது கதாநாயகன்...
Comments
Post a Comment