அப்பாவி கோபி

இன்று பண்டிகையாச்சே!

நேற்றைக்கு பாயசம் கேட்டானே என்று பலவித சித்ரான்னங்களோடு பாயசத்தையும் வைத்துவிட்டு வெண்ணெய்க்கள்ளன் வருவான் வருவான் என்று, வீட்டு வாசலில் கண்ணன் வந்தால் சொல் என்று சொல்லி சந்திராவையும் உட் கார வைத்து விட்டு, சற்றைக்கொருதரம் வாசலில் வந்து வந்து எட்டிப்பார்த்த வண்ணமிருக்கிறாள் சந்திராவின் தாய்.

எதிர்பார்த்துக் காத்திருந்தால் வருபவனா அவன்? சற்றும் எதிர்பாரா தருணத்தில் வந்து நிற்பானே..

நீங்கள் போகும் வழியிலந்த நீல வண்ணனைப் பார்த்தால் அந்த அப்பாவி கோபி பாயசத்தோடு காத்திருக்கிறாளெனச் சொல்லி விட்டுப் போங்கள்...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37