Posts

Showing posts from April, 2022

கிரஹணத்தில் உதித்த நிலவு - 3

விஸ்வரூபன் மிகுந்த புத்தி கூர்மை உள்ளவனாக விளங்கினான். வெகு விரைவில்‌ எல்லா‌சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தான். அவனது ஞானம் அவனது திருமுகத்தில் ஒளிர்ந்தது. மகிழ்ச்சியாக நாள்கள்‌ ஓடிக்கொண்டிருந்தன. ஒருநாள் ஜகந்நாத மிஶ்ரர் எதேச்சையாக அத்வைதாசாரியாரை சந்தித்தார். விஶ்வரூபனின் படிப்பு பற்றி பேசிக்கொண்டிருந்த பெரியவர், ஜகந்நாதரைப் பார்த்து சட்டென்று உனக்கு ஒரு அவதார புருஷன் பிறப்பான் என்று ஆசீர்வாதம்‌ செய்தருளினார். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து சசிமாதா மீண்டும் கருவுற்றாள். இம்முறை கர்ப காலத்தில் அவளுக்குப் பல தெய்வீகமான அனுபவங்கள் ஆச்சர்யமான முறையில்‌ ஏற்பட்டன. கனவா நினைவா என்று தெரியாத நிலையில் அவளுக்குப்‌ பல தேவதைகளின் தரிசனங்கள் ஏற்பட்டன. சில சமயங்கள் சில தேவதைகள் அவளைச் சுற்றி சுற்றி வருவதைக் கண்டாள். இதற்கெல்லாம் காரணம் திருவுடையோனை அவள் கருவுடைத்தானதே. ஒவ்வொரு முறையும் தர்மம் நலியும்போது இறைவன் உருவெடுத்து வந்து காத்து காலத்திற்கேற்ற வழியைக் காட்டுகிறான். இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. கி.பி. 1542ம் வருடம், பங்குனி மாதத்தின் பௌர்ணமிநாள். உலகம் கொண்டாடும் ஹோலித் திருநாள். ஊரே...

கிரஹணத்தில் உதித்த நிலவு - 2

ஜகந்நாத மிஶ்ரரின் இல்லறம் இனிதே நடந்து கொண்டிருந்தது. துன்பம் என்ற ஒன்று இல்லையெனில் வாழ்வில் இன்பத்திற்கு மதிப்பின்றி போய்விடும் என்பதாலோ என்னவோ இரண்டையும் கலந்தே வாழ்க்கையை அமைக்கிறான் இறைவன். சசிமாதாவிற்கு வரிசையாக எட்டு பெண் குழந்தைகள் பிறந்ததோடு மட்டுமின்றி வரிசையாக இறந்தும் போயின. பிள்ளையில்லாதவர் துன்பம் பெரியது. அதனினும் கொடிது பெற்ற குழந்தையைப் பறிகொடுப்பவர் துயரம். ஒன்றல்ல இரண்டல்ல. கண்ணனின் தாய் தேவகி மாதா ஆறு குழந்தைகளைப் பறிகொடுத்தாள். சசிமாதா எட்டு குழந்தைகளை எமனிடம் வாரிக்கொடுத்தாள். மனமெல்லாம் ரணமாகி துன்பக் கடலில் மிதந்தனர் அப்புண்ய தம்பதிகள். துன்பக்கடலில் திசை தெரியாமல் தவிப்போர்க்கு ஒரே ஆறுதல்‌ ஸாதுக்களின் சரணமும் அவர்களது வார்த்தைகளும்தானே. அத்வைதாசாரியார் என்ற மஹாத்மா நவத்வீபத்தில் வாழ்ந்துவந்தார். எல்லா சாஸ்திரங்களிலும் கரை கண்ட மஹா பண்டிதரான அவர் பரம பக்தருமாவார். காலத்தின் கொடுமையால் நசிந்துவரும் தர்மத்தை நிலை நிறுத்த பகவானை அவதாரம் செய்யும்படி தினமும் ரகசியமாகப் ப்ரார்த்தனை செய்துவந்தார். ஜகந்நாத மிஶ்ரரை அவர் நன்கறிவார். ஒரு நாள் எதேச்சையாக அவரைச் சந்திக்க நே...

கிரஹணத்தில் உதித்த நிலவு - 1

கிரஹணம்தான். பாரதம் முழுதுமே கிரஹணம் பிடித்ததுபோல் இருந்தது. ஒரு பக்கம்‌ ஆட்சி மாற்றங்கள், அந்நிய ஆட்சியாளர்களின் கொடுமைகள், ஒரு புறம் வேத ஸாரத்தை விட்டு மீமாம்ஸ் சாஸ்திரமும் கர்ம மார்கமும் வெகுவாகப் பரவி க் கொண்டிருந்தது. இறைவன் ஒரு சாராருக்கு மட்டுமே எனவும், இறையை அடைய கடும் சாதனைகளைப் பின்பற்றவேண்டி பிரசாரம் நடந்துகொண்டிருந்தது. ஒரு புறம் சாதிக்கொடுமைகள், ஒரு புறம் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறுதல் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. சாதாரண மக்கள் மனநிம்மதியின்றி‌த் தவித்துக்கொண்டிருந்தபோது பாரதம் முழுதும் ஆங்காங்கே பல ஸாதுக்களின் அவதாரம் ஏற்பட்டது. துகாராம், நாமதேவர், குரு கோவிந்த் சிங்,‌ ஸ்வாமி ராமானந்தர், கபீர்தாஸ் பலரும் ஒரே நேரத்தில் அவதாரம் செய்து பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களிடையே எளிய பக்தி மார்கத்தைப் பிரசாரம் செய்தனர். இதற்கிடையே வங்கதேசம் பல அந்தணர்களால் ஒதுக்கப்பட்ட தேசமாகக் கருதப்பட்டது. தீர்த்த யாத்திரையாகச் சென்றால்கூட வங்கதேசம்‌ சென்று வந்தால் ப்ராயசித்தமும் கர்மாக்களும் செய்தனர். பலரும் வங்கதேசத்தைத் தொடாமலே யாத்திரை சென்று வந்தகாலம் ...