புதுப் பெண்

இன்று காலையிலேயே கோகுலம் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது.

சின்னஞ்சிறு பெண்ணொருத்தி, யாரென்றே தெரியவில்லை, கோகுலத்திலுள்ள எல்லாத் தெருக்களிலும் புகுந்து புறப்பட்டுக்கொண்டிருந்தாள்.

அவளும், நிலா போன்ற அவளது முகமும், நெத்திச்சுட்டியும், பின்னலும், அதில் குஞ்சலமும், மூக்கில் வளையம், தலையிலிருந்து அந்த வளையத்தில் கோர்த்த மாட்டல், புல்லாக்கு, அவள் நடைக்கேற்பத் தாளம் போட்டுக்கொண்டு ஆடும் கல் வைத்த ஜிமிக்கி, விதம் விதமான வளையல்கள் கலகலக்கும் தாமரை போன்ற கரத்திலுள்ள முல்லைப்பூ விரல்களால் பட்டுப்பாவாடையைப் பிடித்துக் கொண்டு, மறு கரத்தால் பின்னலை முன்னால் போட்டுச் சுழற்றிக் கொண்டு அன்னம்போலவள் நடக்கும் அழகைக் காண கோகுலத்திலுள்ளோர் அனவரும் அவள் பின்னால் போய்க் கொண்டிருந்தனர்.

விதம் விதமாய் அவள் யாரென்று கேட்டுப் பார்த்தாயிற்று.
பதிலுக்கு கண்ணாடி போன்ற பட்டுக் கன்னத்தில் குழி விழும்படி நமுட்டுச்சிரிப்பு சிரிக்கிறாள். அவள் சிரிக்கும் போது கண்களும் சிரிக்கின்றன.

யாராய் இருக்கும்? புதுப் பெண்ணாய் இருக்கிறாள்..யசோதை கண்ணில் பட்டால் மருமகளாக்கிக் கொள்வாள்..

ஒருவருக்கும் தெரியவில்லை இவள் யாரென்று..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37