கைக்கெட்டும் கங்கை எட்டு
கங்கை 1 பரமசிவன் தலைமேலே பக்குவமாய்ப் பரவி மனம் குளிவித்து மாலையாய்த் திகழ்பவளே! - உன் அணுத்திவலை நீர் ஒரு கணம் பட்டாலே பாவமெல்லாம் கழிந்தோடும் புண்ணியம் கோடியாகும்| உன் பொட்டு நீர் எனைத் தொட்டதும் கலி பயந்தோட சாமரம் கொண்ட அமரமாதர் அன்பு கொண்டாடுவரே கங்கை 2 ப்ரம்மாண்டம் பிளந்து உன்னிரண்டு கரைகளாச்சு கண்ணாமூச்சி ஆட சிவனாரின் ஜடையாச்சு சொர்கம் முதல் மேரு வரை பாய்ந்து வரும் அழகாச்சி கடல் முழுக்க நிரப்பியாச்சு எங்க பாவமெல்லாம் கழுவியாச்சு கங்கை 3 தேனாட்டம் உன் தண்ணீர் தேனீயெல்லாம் குடிக்குது தேவமாதர் குங்குமம் செந்நீராய் ஓடுது ஆனையெல்லாம் முழுகி முழுகி தினவு தீர குளிக்குது அது தும்பிக்கையால் கலக்கி கலக்கி கடலலைபோல் ஆடுறாய் காலை மாலை தவமுனியோர் முழுகி உன்னை வணங்குறார் - அவர் பூஜை செய்த பூவெல்லாம் உனக்குப் பூவாடையா மிதக்குது ஆசையாக வந்து உந்தன் மடியில் முழுகி எழுந்தேனே அழகம்மா என் துன்பமெல்லாம் கழுவி இப்போ காத்திடு கங்கை 4 விதித்தாத்தா கமண்டலத்தின் கருவாய் உதித்தவளே! ஹரி சரணம் தழுவிப் பெருந்தூய்மை பெற்றவளே! அரன் தலையின் அணிகலனில் அருமணியாய் அமர்ந்தவளே! தவமுனியின் செவிபாய்ந்து மகள