உள்ளம் ஆடும் ஆட்டத்தில் ஒவ்வொரு உறுப்பும் வலிக்குது.. ஓரங்க நாடகமொன்று ஓய்வின்றி நடக்குது.. ஒவ்வொரு வேடமும் என் ஒருவளுக்கே பொருந்துது ஒன்பது ஓட்டைகளும் ஒழுகிக்கொண்டே இருக்குது! ஒலி வடிவமாய் வந்து உனதாட்டம் துவக்கு. என்னை ஒழித்து உன்னை உருப்படுத்து! ஓங்காரப் பொருளே நீ ஓடோடி உடனே வந்திடு!
Posts
Showing posts from March, 2019
நாமச்சுவை... (17)
- Get link
- X
- Other Apps
எப்போதும் என்னோடு இருக்கிறாய்! எழும்போதே என்னுள் இசையாகிறாய்! இதயத் துடிப்பை உன் தாளமாக்கினாய்! வாய் திறந்தால் வார்த்தைகளுக்கு முன்னால் ஓடி வருகிறாய்! திசை தெரியாமல் தவிக்கும் நேரத்தில் சேருமிடத்தின் அரசவீதி காட்டுகிறாய்! கயவர்களின் களிப்பேச்சில் மயங்கும் நேரம் கண்ணுக்குத் தெரியாமல் மனத்தில் கல்லென உறைகிறாய்! ஆபத்துகள் அனைத்தும் உன் வரவால் சம்பத்துகளாகின்றன.. உருவமில்லையானாலும் என்னுள் உணர்வாய்க் கலந்திருக்கிறாய்! என் இனிய இறைநாமமே! உன்னோடு வாழ்தல் இனிது! <<Previous Next>> Back to Index